மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் கோவை ஷோரூமில், கலைநயமிக்க வெட்டப் படாதவைர நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
தலைசிறந்த நகை வடிவமைப்பாளர்களால் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ள இந்த நகை கள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன. கண்காட்சியை பானுமதி, அப்துல் நாசர் அகியோர் தொடங்கி வைத்தனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ் நாடு மேற்கு மண்டலத் தலைவர் நௌசாத், கோவை கிளைத் தலைவர் மனு, மேலாண்மைப் பயிற்சியாளர் ராகுல், கிளை வர்த்தக மேலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அணிந்தாலே ஜொலிக் கும் வைரநகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ’எரா’, பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’, கலாச்சாரத்தை பிரதிப லிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிவமைப்புகளில் உருவான ’டிவைன்’, குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம்.
மலபார் கோல்டு அண் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 280- க்கும் மேற்பட்ட சில்லறை விற் பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.தமிழகத்தில் செ ன்னை, கோவை, மது ரை, திருநெல்வேலி, நாகர்கோவில், சேலம், திருச்சி, ஈரோடு, வேலூர், இராமநாதபுரம், தருமபுரி, தஞ்சாவூர், கும்பகோணம், திருப்பூர் ஆகிய நகரங்களில் 18 கிளைகளை கொண்டுள்ளது.