fbpx
Homeபிற செய்திகள்கோவை நீதிமன்ற வளாகம் முன் அம்பேத்கருக்கு சிலை வைக்க வலியுறுத்தல்

கோவை நீதிமன்ற வளாகம் முன் அம்பேத்கருக்கு சிலை வைக்க வலியுறுத்தல்

கோவை மாவட்டம் வடக்கு வட்டம் தடாகம் ரோடு, சிவாஜி காலனியில் அனைத்து சமூக மக் களுக்கும் உதவும் பேரவையின் சார்பில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது.

நிறுவனத் தலைவர் மற்றும் வழக்கறிஞர் வீ.புஷ்பானந்தம் தலைமை தாங்கினார். குமாஸ்தா தேவராஜ் முன்னிலை வகித்தார்.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் அல்லது திரும்பப் பெற வேண்டும். விவசாய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கோவையில் இருந்து பொள்ளாச்சி வழியாக மதுரைக்கு சென்று கொண்டிருந்த, நிறுத்தப்பட்ட பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். கோவை விமான நிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு சட்ட மாமேதை அம்பேத்கர் முழுஉருவ சிலையை நிறுவ வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

குமாஸ்தா லட்சுமி, ஜெபா, மோகன்ராஜா, வர்ஷா, வர்ஷினி, வங்கி ஊழியர் உமா, பாலகிருஷ்ணன், வடவள்ளி அமீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செந்தில்குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img