Homeபிற செய்திகள்கோவை நீதித்துறை தங்கும் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

கோவை நீதித்துறை தங்கும் விடுதி கட்டிடத்தை திறந்து வைத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலக மண்டல மைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள முக்கிய பிரமுகர் தங்கும் விடுதி கட்டிடத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி திறந்து வைத்தார்.

அருகில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரிஷ் உபத்யாய், கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், மாவட்ட முதன்மை மாஜிஸ்திரேட் சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img