கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேற்று (ஆக.19) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.96-க்கு உட்பட்ட சுந்தராபுரம், லோகநாதபுரம் பகுதியில் குடிநீர் விநியோகிப்பதற்காக 20 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, புதியதாக கட்டி முடிக்கப் பட்ட மேல்நிலை நீர்த்தேக் கத்தொட்டியில் இருந்து, அப்பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகிக்க பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ள நீர்த் தேக்கத் தொட்டியை பார்வையிட்டார் ஆணையாளர்.
98-வது வார்டுக்கு உட்பட்ட காந்திநகர், 94-வது வார்டுக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர்.நகர், வார்டு எண்.99, வெள்ளலூர், இட்டேரி ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகளுக்காக பொக் லைன் இயந்திரங்கள் மூலம் குழிகள் தோண் டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.
விரைவில் இப்ப ணிகளை முடித்திட வேண்டுமென உத்தரவிட்டார் ஆணையாளர்.
வார்டு 95, அன்னை இந்திரா நகர் பகுதியில் வீடுகளில் உள்ள கழிவு நீரை வெளியேற்றுவதற்காக பாதாள சாக்கடை குழாய்களில் இணைப் புக் குழாய்கள் பொருத்தப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டார்.
வார்டு 100, முத்து நகர் பகுதியில் கழிவு நீர் வெளியேற்று நிலையம் கட்டப்பட்டுவரும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார் மாநகராட்சி ஆணையாளர். பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, செயற் பொறியாளர் ஞானவேல், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் சுந்தர்ராஜன், உதவி செயற் பொறியாளர் சுந்தர்ராஜ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் லட்சுமணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



