fbpx
Homeபிற செய்திகள்கோவை டூன் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு கல்வி முறை அறிமுகம்

கோவை டூன் பள்ளியில் செயற்கை நுண்ணறிவு கல்வி முறை அறிமுகம்

கோவை சுங்கம் புறவழி சாலையில் இயங்கி வரும் சர்வதேச கல்விக்கான டூன் பொது பள்ளி ( ஜூனியர் பிரிவு) செயற்கை நுண்ணறிவு முறையின் மேம்பட்ட வடிவமான அதிகரித்த மெய்மயை (augmented reality) தளமாக கொண்டு இயங்கும் ஸ்கை லஜி என்ற புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஆர்தர் ராக் தொழில் முனைவு மையத்துடன் பங்கு தாரராக இணைந்து செயல்படுத்தப்படும் இந்த புதிய கல்வி தளம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் முதல் பள்ளி என்ற பெருமையை டூன் பொது பள்ளி ஜூனியர் பெற்றுள்ளது.

பள்ளியின் நிர்வாக இயக்குனர் கீர்த்தனா இளங்கோ கூறியதாவது: இந்த புத்தாக்க தளத்தின் மூலம் மாணவர் கற்றல் திறன் முழுமை அடையும், கல்வியில் முழுஈடுபாடு பெற இந்த முறை உதவும்.

இந்த புதிய வடிவம் துபாய் நாட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கும் டி டெக் வெஞ்ச்சர்ஸ் நிறுவனத்தின் ரஷீத் துணையுடன் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

மழலையர் கல்வி முறையில் மாபெரும் மாற்றத்தை உருவாக்கும் இந்த புதிய கல்வி தளம் பெற்றோரின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img