பன்னோக்கு மென்பொ ருள் நிறுவவனமான கோவை.கோவுக்கு, எகனாமிக் டைம்ஸ் பூட் ஸ்ட்ராப் சாம்ப் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.
கோவை.கோ ஒரு பன்னோக்கு மென் பொ ருள் நிறுவனம், வணிக, தொழில்நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, அறிவு சார் மேலாண்மை போன் றவற்றை,இந்தியாவில் கோவையிலும், இங்கிலாந்தில் லண்டனிலும் செயல் படுத்தி வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு எகனாமிக் டைம்ஸ் வழங்கும் ஸ்டார்ட் அப்2021 விரு தான, பூட்ஸ்ட்ராப் சாம்ப் 2021 விருது கிடைத்துள்ளது. இந்த விருது, இந்திய தொழில் முனைவோருக்கு ஓர் அங்கீகாரம் தரும் விருது.
அதோடு, இந்தி யாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் நிறுவனர்கள், ஸ்டார்ட்அப் நிறு வனங்களின் செயல்பாடு களை கௌரவிப்பதாக இது அமைகிறது.
கோவை.கோ நிறுவன மானது, நடுவர்கள் தயாரித்த பட்டியலில், செயல்பாடுகளை அதிகரித்தல், நிதிநிலை வளர்ச்சி,கோவை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து சர்வதேச அளவில் வணி கம் மேற்கொள்ளல் போன்றவற்றில் முன்னி லை பெற்றது.
கோவை.கோ நிறுவனத்தின் நிறுவனர் மற் றும் முதன்மை செயல் அதிகாரிசரவணக்குமார் கூறியதாவது: இத்தகைய விருதுகள் பெறுவதும், அங்கீகாரம் கிடைப்பதும் எங்களையும் பணியாற்றுவோரையும் ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எங்களது தயாரிப்பை கட்டமைப்பதிலும், வாடிக்கையாளர்களை கவர்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தினோம். தற்போது கிடைத்துள்ள அங்கீகாரம், இதே பாதை யில் தொடர்ந்து பயணிக்கவும், 2030-ல் சாப்ட்வேர் சேவையில் தனித்துவம் பெறவும் வாய்ப்பாக அமையும்.
கோவை நக ரை, நாட்டின் அடுத்த சாப்ட்வேர் சேவை மையமாக மாற்ற எங்களது அணியினர் விரும்புகின்றனர். இரண்டாம் நிலை
நகரங்களின் முன்னேற் றத்துக்காவும், இளைய தலைமுறையினர், திறன் மிக்க புதியவர்களை ஊக்குவித்து, தொழில் கல்வி திட்டங்களுக்கு ஊக்கப்படுத்தி சமுதாயத் திற்கு பணியாற்றுவோம் என்றார்.
கோவை.கோ 2011-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. நிறுவனங்களை உருவாக் குதல், சாப்ட்வேர் சேவை உள்ளிட்ட பணிகளில் வருவாய் ஈட்டி வருகிறது. பல்வேறு நாடுகளில் 250-க் கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகின்றனர்.
கோவை.கோ ஒரு முன்னணி சாப்ட்வேர் மற்றும் கோவையைச் சேர்ந்த பி2பி சாஸ் கம்பெனி. மைக்ரோசாப்ட் பிஸ்டாக், அஸூர் சர்வர்லெஸ் சர்வருக்கு கண்காணிப்பு மற்றும் அனலிட்டிக்ஸ் சேவையை வழங்குகிறது.



