Homeபிற செய்திகள்கோவை குமரகுரு பொறியியல் கல்லூரில் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி...

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரில் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டி: அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கினார்

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரில் நடைபெற்ற ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந் தில் பாலாஜி துவக்கி வைத்தார்.- 11 நாடுகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு.

கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில், ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டி இன்று துவங்கியது. இப்போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: ஒட்டுமொத்தமாக இந்தியாவில் குறிப்பாக ஆசிய அளவில் தமிழ்நாடு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த விருதுகளை, பரிசுகளை பெற வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு விளையாட்டு துறைக்கு என்று பல்வேறு ஊகங்களையும், திட்டங்களையும் முதலமைச்சர் வழங்கி வருகின்றார்கள்.

குறிப்பாக தமிழகம் கல்வி, மருத்துவம் உள்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் வளர்ச்சி பெற வேண்டும். அது தொலை நோக்கு பார்வையாக பத்தாண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி என்பது இந்தியாவின் முதன்மை மாநில மாக தமிழகம் அடைந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு துறைகள் வாரியாகத் தமிழக முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

விளையாட்டுத் துறையை பொறுத் தவரை தமிழகத்திலிருந்து சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி பரிசுகளையும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெறவேண்டும் என்று முதல்வரின் இலக்கினை லட்சியத்தினை நிறைவேற்றக்கூடிய வகையில் குறிப்பாக கோவையை பொறுத்தவரையாக இருந் தாலும் சரி, மேற்கு மண்டலத்தைப் பொறுத்த வரையாக இருந்தாலும் சரி இந்த விளையாட்டு போட்டிகளுக்கு நிச்ச யமாக தமிழகத்தில் தமிழக முதல்வர் ஊக் கம் தருவார்.

இங்கே வருகை தந்து இருக்கின்ற சர்வதேச அளவில் 11 நாடுகளை சேர்ந்த அனைவரையும் தமிழக முதலமைச்சர் சார்பாகவும், கோவை மாவட்ட நிர்வா கத்தின் சார்பாகவும் வருக வருக என்று அன்போடு வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

இன்று துவங்கிய இந்த போட்டியில் இந்தியா, ரஷ்யா, ஜப்பான், கொரியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட வீரர் – வீராங்கனைகள் பங்கு பெறுகின்றனர்.

சப் ஜூனியர், ஜூனியர், மாஸ்டர், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகின்றது. 17 ந்தேதி இன்று துவங்கிய இப்போட்டி 21 ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதன் துவக்க விழா நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, கல்லூரியின் துணைத் தாளாளர் சங்கர் வாணவராயர், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), பையா ஆர்.கிருஷ் ணன், மண்டல தலைவர் கதிர்வேல், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்மறை, ஏர்போர்ட் ராஜேந்திரன், மோகன்சங்கர், சுல்தான், ராஜேஷ் திவாரி, ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img