கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் கப்பளாங்கரை ஊராட்சியில் முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட அணைநீர் ஆதாரமாக கொண்ட பொள்ளாச்சி வடக்கு பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 212 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் ரூபாய் 69.31 கோடி மதிப்பீட்டில் தொடங்கி வைக்கப்பட்டதை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் உள்ளனர்.



