fbpx
Homeபிற செய்திகள்கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் பெரியசாமித் தூரன் ஆண்டு விழா

கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியில் பெரியசாமித் தூரன் ஆண்டு விழா

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பெரியசாமித் தூரன் 115ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக கோவையில் நூல் வெளியீட்டு விழா, கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவையில் செயல்பட்டு வரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், ஆண்டுதோறும் தமிழ் சார்ந்த, இலக்கியம் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த சந்திப்புகள், தமிழ் நூல்களை வெளியிடுதல், கருத்தரங்குகள் என தமிழ் வளர்ச்சி தொடர்பாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான பெரியசாமி தூரன் 115 வது விழாவை கொண்டாடும் விதமாக உலக தமிழ் பண்பாட்டு மையம் சார்பாக கருத்தரங்குகள், நூல் வெளியீடு என இரண்டு நாட்கள் நிகழ்ச்சகளுக்கான துவக்க விழா கோவை என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் செயலர் மருத்துவர் தவமணி தேவி பழனிசாமி முன்னிலை வகித்தார். விழாவில் டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் இயக்குனர் முனைவர் பெ. இரா. முத்துசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் கிருஷ்ணராஜ வாணவராயர் கலந்து கொண்டு, ‘பெரியசாமித் தூரன் நாடகங்கள்’,என்ற நூலினை யும் மாணவர்களின் படைப்புகள் அடங்கிய ‘தமிழோசை’ எனும் நூலினையும் வெளியிட்டு பேசினார்.

தொடர்ந்து விழாவில் கவுரவ அழைப்பாளராக கலந்து கொண்ட, சென்னைப் பல்க லைக் கழகப் பேராசிரியர் மற்றும் மொழித்துறைத் தலைவர் முனைவர் மணிகண்டன் தனது வாழ்த்துரையில், பெரியசாமி தூரனின் வாழ்க்கையை இன்றைய மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவரின் நாடகங்கள் கர்நாடக சங்கீத பாடல்களை கற்று பயனடைய வேண்டும் என அறிவுறுத்தினார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையமும் டாக்டர் என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழில் பெரியசாமித் தூரனின் ஆளுமைகள் குறித்து ஆய்வறி ஞர்கள் கட்டுரை வழங்கினர்.

விழாவில், டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமமூர்த்தி நன்றியுரை வழங்கினார். விழாவில் தமிழ் ஆர்வலர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img