கோவை இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் படித்து முடித்து பட்டம்பெறும் 104 பட்டதாரிகளுக்கு பட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குநர்(தொ.அ.ஈ) ராஜமூர்த்தி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆகியோர் உள்ளனர்.



