Homeபிற செய்திகள்கோவையில் 2 அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய ‘வாக்கரூ’ குழுமம்

கோவையில் 2 அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய ‘வாக்கரூ’ குழுமம்

கல்வி, அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் சமூகப் பொருளாதார மேம் பாட்டை குறிப்பாக பின்தங்கியவர்களின் வாழ்க்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு திட்டங்களை ‘வாக்கரூ’ குழுமம் மேற்கொண்டு வரு கிறது.

மாணவர்களின் திறமை களை வெளிப் படுத்தும் விதமாக தரமான கல்வியை உறுதி செய்யவும், கற்றல் வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் கோவை, செட்டிபாளையம் பகுதி யில் உள்ள 2 அரசுப் பள்ளிகளுக்கு சிறப்பான உள்கட்டமைப்பை ஏற்படுத் திக் கொடுத்துள்ளது.

இந்த உள் கட்டமைப்பு வசதிகள் செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, செட்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் செய்யப்பட் டுள்ளன.
தங்களது பள்ளிக்கு போதிய உள் கட்டமைப்பு வசதிகளை செய்து தரு மாறு பல்வேறு பள்ளிகள் ‘வாக்கரூ’ குழும த்தை அணுகின.

இதனைத் தொ டர்ந்து பள்ளிகளுக்கு படிப்படியாக உதவிகளை வழங்க இக்குழுமம் முடிவு செய்தது. அதன் முதல் கட்டமாக, செட்டி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நவீன சுகாதார அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்துள் ளது.இது குறித்து ‘வாக்கரூ’ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் விகேசி நவ்ஷாத் கூறியதாவது:

முந்தைய கால கட்டங்க ளில் தண்ணீர் பற்றாக்குறை, கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல், இக்குழந்தைகள் கழிவறையை பயன்படுத்த மிகவும் சிரமப்பட்டனர். பெண் குழந்தைகளுக்கான சுகாதார பிரச்சினைகளும் இருந்தன. இது குறித்து அறிந்து பள்ளிக்கு தேவை யான உள்கட்ட மைப்பு வசதிகளை செய்து கொடுத் துள்ளோம்.

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளால் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தற் போது அரசு பள்ளிகளுக்கு வரத் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக இங்கு மாணவர்களின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த பள்ளிகளில் போதிய டெஸ்க், பெஞ்சுகள் இல்லாத காரணத்தால் மாணவர்கள் தரையில் உட்கார வேண்டிய நிலை இருந்தது. இதைப்போக்கும் விதமாக மேற்கண்ட 2 பள்ளிகளுக்கும் தேவை யான டெஸ்க், பெஞ்ச் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் குழுமம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டது என் றார்.

செட்டி பாளையம் அரசு மேல்நிலைப் பள் ளியில் உள்ள நூலக த்தையும் டிஜிட் டல் நூலமாக மாற்றும் நடவடிக்கையை வாக்கரூ மேற்கொண்டு வருகிறது.

மாணவர்கள் இடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்ப்பது, சொற்களஞ்சியத்தை மேம்படுத்துதல், மாணவர்களின் தகவல் தொடர்புத் திறனை வளர்ப்பது ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள மற்ற அரசு பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த இக்குழுமம் திட்டமிட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img