fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பரதநாட்டிய அரங்கேற்றம்

கோவையில் பரதநாட்டிய அரங்கேற்றம்

கோவை ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளி மாணவி சவுந்தர்யா செங்கதிரின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலையரங்கத்தில் நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினர்களாக தன்னம்பிக்கை பேச்சாளரும், எழுத்தாளருமான கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா, ஸ்ரீ பாலரிஷி பீடம் விஸ்வாசிரஸணி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.


சவுந்தர்யா செங்கதிர், பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுகலை எலக்ட்ரானிக் மீடியா பயின்று வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியில் குரு மிருதுளா ராயிடம் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.


அரங்கேற்ற நிகழ்ச்சியில் இவரது பரத நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பரதநாட்டியத்தில் பல்வேறு முகபாவனைகளை இவர் வெளிப்படுத்தினர். முடிவில் மாணவி சவுந்தர்யா செங்கதிரை அனைவரும் பாராட்டி கவுரவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img