fbpx
Homeபிற செய்திகள்கோவையில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் மாற்றம்: கலெக்டர் சமீரன் அறிவிப்பு

கோவையில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறையில் மாற்றம்: கலெக்டர் சமீரன் அறிவிப்பு

கோவையில் பொதுமக்களுக்கு சிரமமின்றி தடுப்பூசி கிடைக்கும் விதமாக, தடுப்பூசி செலுத்தும் முறையில் மாற்றம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கோவையில் பிற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரவே தடுப்பூசி மையங்களில் தங்கி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதால், அந்த பகுதி மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்கும் விதமாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, வட்டார அளவில் சேமித்து வைக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் நாள்தோறும், எந்தெந்த பஞ்சாயத்துக்களில் செலுத்தப்படும் என்ற விபரம், தடுப்பூசிகளின் எண்ணிக்கை ஆகியவை காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேற்படி அறிவிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மையங்களில் காலை 10 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ள ஆட்சியர், இதனை அந்தந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுகொண்டு உள்ளார்.

மேலும், இந்த மையங்களை கண்காணிக்க வருவாய், உள்ளாட்சி மற்றும் காவல்துறை உள்ளடக்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

கொரோனா தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து தடுப்பூசியை செலுத்திகொள்ள அறிவுறுத்தி உள்ள ஆட்சியர், தடுப்பூசி மையங்களில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற இலவச எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img