fbpx
Homeபிற செய்திகள்கோவையில் குறை தீர்க்கும் முகாம்: மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் அமைச்சர் சு.முத்துசாமி

கோவையில் குறை தீர்க்கும் முகாம்: மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார் அமைச்சர் சு.முத்துசாமி

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில், மாநகராட்சி வணிக வளாகத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

கோவை மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் நஞ்சப்பா சாலையில் இயங்கி வருகின்றது. இங்கு நேற்று தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வந்தார்.

அங்கு நடந்த குறை தீர்க்கும் முகாமில் பங்கேற்று பொதுமக்களிடத்தில் நகர் ஊரமைப்புத்துறை தொடர்பான கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி, திட்ட மாற்றம், போன்ற கோரிக்கைகள் குறித்தான குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்,

இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img