Homeபிற செய்திகள்கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும்-அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கோவையில் குப்பையில் இருந்து மின் சாரம் தயாரிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவையில் அமைச்சர் கே.என் நேரு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளில் ரூ. 24 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை, குடிநீர் வசதி, குப்பை கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பில்லூர் 3-வது குடிநீர் திட்டம் ரூ. 750 கோடி மதிப்பீட்டில் நடைபெறுகிறது. அந்த பணி இன்னும் ஓராண்டில் நிறைவு பெற்றுவிடும்.

சிறுவாணியில் இருந்து 9 கோடி லிட்டர் தண்ணீர் தினமும் கோவை மாநகராட்சிக்கு கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் வெறுமனே 2 1/2 கோடி லிட்டர் மட்டுமே கொடுக்கிறார்கள்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்கனவே தமிழக முதல்வர், கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். விரைவில் தமிழக உயர் அதிகாரிகளை அங்கு அனுப்பி வைத்து குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். கோவை மாநகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உருவாக்கப்பட்டது.

மக்காத குப்பைகளை தனியார் நிறுவனத்தினர் வாங்காத நிலையில் எல்லா குப்பைகளும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு சென்றடைந் தது. அங்கு பயோ மைனிங் முறையில் குப்பைகள் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதில் 16 ஏக்கரில் குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கோவை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்க மும்பையில் இருந்து சிறப்பு ஆலை கொண்டுவரப்பட்டு பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img