fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை

கோவையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க நடவடிக்கை

கோவை மாநகராட்சிப் பகுதியில் 15 லட்சத்து 38 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் 9 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வழங் கப்படுகின்றது.

சிறப்பு நிதி பெற்று இரண்டு நாட்க ளுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கும் வகையில் நட வடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனியில் மக்கள் சபை கூட்டத்தை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கோவை மாநகராட்சியில் 15 லட்சத்து 38 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் 9 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங் கப்படுகின்றது.

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண் ணீர் வழங்கும் வகையில் சிறப்பு நிதி பெற்று மாந கராட்சி முழுவதும் திட்டம் செயல்படுத்தப்படும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்தால் ஏற்படும் பிரச்சினை தொடர்பான மனுக்கள் குறித்தும் முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img