fbpx
Homeபிற செய்திகள்கோயம்புத்தூர் யு.பிஎஸ். சோலார், ஸ்டெப்லைசர் சங்க பொதுக்குழு கூட்டம்

கோயம்புத்தூர் யு.பிஎஸ். சோலார், ஸ்டெப்லைசர் சங்க பொதுக்குழு கூட்டம்

கோவை யு.பிஎஸ். சோலார், ஸ்டெப் லைசர் சங்கம் 9-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அவினாசி ரோட்டில் உள்ள கிராண்ட் ரீஜென்ட் ஓட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

அதில் தலைவராக பி.ஸ்டாலின், உதவி தலைவராக ஜி.முத்துக் குமார், செயலாளராக பாலசுப்பிரமணியன், இணை செயலாளராக பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன், பொருளாளராக சரவண செல்வன் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் கூட்டத்தில் அறக்கட்டளையின் அறங் காவலராக ராஜகோபால், செயலாளராக காஜாமொய்தீன், ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கூட்டத்தில் சிறப்பு அமைப்பாளர்களாக வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் பி.சுப்பிரமணியன், விஜய் டி.வி.புகழ் டாக்டர் ஏ.ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் சங்க முன்னாள் தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்ட நிகழ்ச்சிகளை சங்க இணை செயலாளர் பி.ஆர்.ஓ. தனசேகர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img