கொரோனா பெருந்தொற்றால், பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்தவர்கள் என கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த 228 குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்க சமூக பாதுகாப்புத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
இதில் தற்போதுவரை, பெற்றோரை இழந்த 3 குழந்தைகள், பெற்றோரில் ஒருவரை இழந்த 79 குழந்தைகள் என மொத்தம் 82 பேருக்கு ரூ.2.52 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று என்பது தமிழகத்தை மட்டுமல்லாது உலகளவிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு உயிர் இழப்புகளும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. பொருளாதார இழப்பை கூட ஈடுசெய்துவிடலாம். ஆனால் மனித உயிரிழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று.
பொறுப்பேற்றவுடன்
போர்க்கால நடவடிக்கை
உலக அளவில் கொரோனா நோய் தொற்றின் வீரியம் அதிகளவில் இருந்த நிலையில்தான், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொரோனா நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்து வருவதை புரிந்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன், கொரோனா தடுப்பூசி உள்ளிட்டவை தட்டுப்பாடுகள் இருந்ததை, போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்தார்.
அத்துடன் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள், கொரோனா தடுப்பூசி ஆகிய தட்டுபாடுகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தார்.
வரும் காலங்களில் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கிறோம் என்ற நிலையினை கடைகோடி கிராம மக்களுக்கும் நம்பிக்கையினை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.
நலத்திட்டங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலனை பாதுகாத்திடுகிற வகையில், கொரோனா தொற்றினால் தாய், தந்தையர் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், அவர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். அவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவற்றில் முத்தாய்ப்பாக, கொரோனா நோய் தொற்றால் தாய், தந்தையினரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணத் தொகையும், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும்.
இரு பெற்றோர்களையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளை பராமரிப்பதற்கு அவர்களின் பாதுகாவலர்களுக்கு ரூ.3000 உதவித்தொகை வழங்கவும், அந்த உதவித்தொகையினை, அந்த குழந்தைகளின் 18 வயது நிறைவடையும் வரை வழங்க ப்படும் என முதல்வப் ஆணை பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் தாய், தந்தையர்களை இழந்த மற்றும் பெற்றோர்களில் ஒருவரை இழந்த பல்வேறு குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளார்கள்.
பாதுகாப்பும், பராமரிப்பும்
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்ததாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில், கொரோனா நோய்த்தொற்றினால், பெற்றோரை இழந்த மற்றும் பெற்றோர்களில் ஒருவரை இழந்த 18 வயது நிறைவடையாத குழந்தைகளுக்கு முதல்வர் அறிவித்துள்ள நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த 228 குழந்தைகளுக்கு கருத்துரு சமூக பாதுகாப்புத்துறைக்கு அனுப்பப்பட்டது.
இதில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 இலட்சம் என ரூ.15 இலட்சமும், பெற்றோரில் ஒருவரை இழந்த 79 குழந்தைகளுக்கு தலா ரூ.3 இலட்சம் என ரூ.2.37 கோடி நிவாரணம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசால் வழங்கப்பட்ட இந்த நிவாரண நிதியின் வாயிலாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி உள்ளிட்டவற்றிற்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 0-18 வயது வரை உள்ள குழந்தைகளில் பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் பெற்றோரை இழந்த குழந்தைகள், தீங்கிழைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட குழந்தைகள், வீடோ அல்லது நிரந்தர வசிப்பிடமோ இல்லாத குழந்தைகள், குழந்தை தொழிலாளர் / பிச்சை யெடுக்கும் குழந்தைகள், காப்பாளருடன் வசிக்கும் குழந்தைகள், உடல் / மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள், போதை பழக்கத்திற்கு உள்ளான குழந்தைகள், போர் / இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அனைத்து விதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடும் குழந்தைகளுக்கு (சட்டத்திற்கு முரண்பட்ட குழந்தைகள்) எதிரான செயல்பாடுகளுக்கு பல்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகள் செயல்பட்டு வருகிறது.
68 குழந்தை இல்லங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் அரசு குழந்தைகள் காப்பகம், 6 அரசு உதவி பெறும் குழந்தைகள் இல்லங்கள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 61 குழந்தைகள் இல்லங்கள் என மொத்தம் 68 குழந்தைகள் இல்லங்களும், ஒரு தத்து மையமும் செயல்படுகிறது.
இவ்வில்லங்கங்களை இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், கண்காணித்தல், ஆய்வு செய்தல் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும்விதமாக இல்ல மேலாண்மை குழுக்களை நடத்துதல், மேலும் குழந்தைகள் இல்லங்களில் பெற்றோரை இழந்த குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் சேர்க்கப்படுவர்.
குழந்தைகள் இல்லங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு, ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு, கிராம / பேரூராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு, நகராட்சி / மாநகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு வாயிலாக குழந்தைகள் இல்ல திட்ட செயல்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் பெற்றோரை இழந்த ஆதரவற்ற வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குழந்தைகள் மற்றும் பிமிக்ஷி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் சேர வருமான வரம்பு ரூ.24,000/- ஆகும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம் நிவாரணத் தொகையால் மீட்பு
கொரோனா நிவாரண நிதியுதவி பெற்ற கிள்ளியூர் வட்டம், பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த பயனாளி சுபிதா தெரிவித்ததாவது:
கணவர் வினுபிரவின் (33 வயது), மகன் ஜெய்டன் (2 வயது), மாமியாருடன் பள்ளியாடி புதுகாடுவெட்டிவிளை பகுதியில் வசித்து வந்தோம். நான் ஙி.ஷிநீ. (சிஷீனீஜீutமீக்ஷீ ஷிநீவீமீஸீநீமீ) படித்துள்ளேன்.
கணவர் கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்நோக்கு பணியில் தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார். கணவர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 29.05.2021 அன்று காலமானார்.
மாமியார் மிகவும் வயதானவர். தற்போது படுக்கையில் இருப்பதால் எந்த வருமானமும் இன்றி எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அன்றாட செலவிற்கே மிகவும் சிரமப்பட்டு வந்தோம்.
எனது தகப்பனார் கூலி வேலை செய்து கிடைக்கும் சிறிய தொகையில், எனது செலவிற்கு சிறிதளவு தந்து உதவி வருகிறார். தந்தையின் உதவியினால், மகனின் சிறிய தேவைகளை கஷ்டத்தின் மத்தியில் பூர்த்தி செய்து வருகிறேன்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றவுடன், கொரோனா நோய் தொற்றால் தாய், தந்தையினரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 இலட்சம் நிவாரணத் தொகையும், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படும் என அறிவித்ததை அருகாமையில் உள்ளவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அனைத்து ஆவணங்களுடன் மனு கொடுத்தேன். அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கணக்கெடுப்பு நடத்தியதில், எனது மகனையும் தேர்வு செய்து, எங்களது குடும்ப சூழ்நிலையினை கருத்தில்கொண்டு ரூ.3 இலட்சம் நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார்கள்.
நிவாரணத் தொகையாக கிடைத்த ரூ.3 இலட்சத்தினை வங்கியில், மகன் ஜெய்டன் பெயரில் நிலையான வைப்புத்தொகையாக போட்டுள்ளேன். இந்த உதவித்தொகை என்னுடைய மகனின் எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
நிவாரணம் வழங்கிய முதல்வர், மாவட்ட நிர்வாகத்திற்கும் என் போன்ற தாய்மார்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
பா.ஜான் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
எஸ்.செல்வலெட் சுஷ்மா,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.



