இந்திய அரசு ஜவுளித் துறை மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை இணைந்து நடத்தும் கைத்தறி கண்காட்சி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் நடைபெறும் இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹாலில்(மீனாட்சி ஹால்) இன்று முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 40 நெசவாளர் சங்கங்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் சிறுமுகைப் புதூர் ஸ்ரீ ராமலிங்க சௌடாம்பிகை நெசவாளர்களின் தேசிய விருது பெற்ற திருவள்ளுவர் மற்றும் திருக்குறள்கள் அச்சிடப்பட்ட சில்க் புடவையும், 1,64,492 வண்ணங்களும், மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 7 உலக அதிசயங்கள் அச்சிடப்பட்ட புடவையும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இந்த கண்காட்சி இலவச அனுமதி யுடன் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் பல்வேறு ரக புடவைகள், போர்வைகள் வேஷ்டிகள் துண்டுகள் ஆகியவை 30% தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது.



