மத்திய கல்வி திட்டத்தின் கீழ் படிக்கக்கூடிய சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் கேம்ஃபோர்ட் இன்டர்நேஷனல் பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 81 மாணவர்கள் தேர்வு எழுதினர். அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 75%-க்கு மேல் மதிப்பெண்களை 61 பேரும், 90%-க்கு மேல் 24 பேரும் பெற்று தேர்ச்சி அடைந்தனர்.
கே.அஜய் கணேஷ் 500-க்கு 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். எஸ்.ஆர்.பிரணகதி 486-ம், காவின் செந்தில்வேல் 479 மதிப்பெண் பெற்று 2, 3-வது இடத்தைப் பிடித்தனர்.
கணிதத்தில் பி.ருஷ்மிகா, எஸ்.விஷ்ணுப்பிரியா, அறிவியலில் கே.அஜய் கணேஷ், சமூக அறிவியலில் விஏ.பிரணவ் ஆகியோர் சதம் பெற்றனர்.
12-ம் வகுப்பு
12-ம் வகுப்பில் 75%-க்கு மேல் மதிப்பெண்களை 53 மாணவர்களும், 90%-க்கு மேல் 19 பேரும் பெற்றனர்.
எஸ்.சிந்துகவி 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். ஆர்.பூர்ணிமா 488, எஸ்.பாவனா 483 மதிப்பெண் பெற்று 2, 3-வது இடங்களைப் பெற்றனர்.
கணினி அறிவியலில் அனந்தகிருஷ்ணன் பாலாஜி, வி.வர்ஷினி, அரசியல் அறிவியலில் சினேகா கட்டியார், வணிகத்தில் எஸ்.சிந்து கவி, ஆர்.பூர்ணிமா, சஞ்சய் ஆகியோர் சதம் பெற்றனர்.
பள்ளித் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சயால் மற்றும் ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.



