கேபிஆர் கல்வி நிறுவனங்களின் சார்பாக கல்லூரி வளாகத்தில் நடந்த மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில், கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை ராணிப்பேட்டை, தர்மபுரி, கடலூர், நீலகிரி, தென்காசி மற்றும் பல மாவட்டங்களிலிருந்து 310 வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டிகள் 9, 12, 15, 18 வயது பிரிவுகளின் கீழ் நடந்தது.
பரிசளிப்பு விழாவில் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முத்துலட்சுமி வரவேற்றார்.
கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் எம். அகிலா, போட்டியில் ஆண்கள், பெண்கள் பிரிவில் வென்ற முதல் 5 வீரர்களுக்குக் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அவருடன், தமிழ்நாடு சதுரங்க அமைப்பின் துணை செயலர் விஜய ராகவன், கோவை மா வட்ட சதுரங்க அமைப் பின் துணை தலைவர் இந்திகாப் அகாம், சர் வதேச முதன்மை நடுவர் முனைவர் சதீஷும் கோப்பைகளை வழங்கினார்கள். கோவை மாவட்ட சதுரங்க அமைப்பின் செயலர் தனசேகரன் நன்றி கூறினார்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடத்தில் வென் றோர் விவரம்: 9 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு: ரித்திக், திருப்பூர், தீரன், ராணிப் பேட்டை, – இஷான் அருண், கோவை. பெண்கள் பிரிவு: சுருதி, கோவை, திவ்யா, கோவை, ராஜேஸ்வரி, திருப்பூர்.
12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு:மாதவன், திருப்பூர், ராகுல், திருப் பூர், நிகில், கோவை.பெண்கள் பிரிவு: வசந்தி, கோவை, நபிலா, நீலகிரி, சுருதிஅருள்மணி, கோவை.
15 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு: நந்திஸ், கோவை, தருண்சஞ்சீவ், கோவை, சர்வேஷ் ஆதித் யா, கோவை. பெண்கள் பிரிவு: கனிஷ்கா, மதுரை, ஸ்ரீஷி வானி, கோவை, தனுஸ்ரீ, கோவை.
18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பி ரிவு: தனுதர்ஷன், திருப்பூர், அதிஷ் விக்ரம்,சுகன்ரித்திக், திருப்பூர்.பெண்கள் பிரிவு: சாருபாலா, கோவை, வேத வர்ஷினி, கோவை, வினுஸ்ரீ, கோவை.



