Homeபிற செய்திகள்கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வொயிட்கோட்

கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வொயிட்கோட்

கேஎம்சிஹெச் மருத்துவமனையின் ஓர் அங்கமாக மருத்துவக் கல்லூரி துவக்கப்பட்டு 2019-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

தற்போது இக்கல்லூரியின் 2020-2021 முதலாமாண்டு மாணவர்களுக்கு மருத்துவ சேவைத் துறையில் அவர்களை இணைத்து கொண்டதை குறிக்கும் வகையில் வொயிட்கோட் வழங்கும் விழா நேற்று (ஆக.23) கேஎம்சிஹெச் கலையரங்கில் நடைபெற்றது.

கே.எம்.சி.ஹெச். மருத் துவமனையின் எலும்பி யல் துறை மருத்துவர் எஸ்.ஜி.திருமலைசாமி, மாணவர்களுக்கு வொ யிட்கோட் அணிவித்து வாழ்த்தினார்.

மாணவர்கள் நன்கு பயின்று பயிற்சி பெற்று தரமான மருத்துவ சேவைகள் மக் களுக்கு அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முதலாமாண்டு மருத்துவ மாணவர்களும், பேராசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண். பழனிச் சாமி மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img