Homeபிற செய்திகள்கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

ஈரோடு மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்நிலை அலுவலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி நேற்று (மே25) துவங்கியது. இன்று நிறைவடைகிறது.

ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்க ளின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார் தலைமை வகித்து, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி கையேட்டினை வழங்கி பேசியதாவது:

கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு இப்புத்தாக்கப்பயிற்சி ஆண்டுதோறும் நடைபெறும். இப்புத்தாக்கப் பயிற்சி இரு நாட்களுக்கு நடைபெறும். ஓர் ஆண்டில் பல்வேறு சுற்றறிக்கைகள் மாநிலப்பதி வாளர் அலுவலகத்தில் இருந்து வெளியி டப்படுகின்றன. அதையெல்லாம் தொகுத்து இப்புத்தாக்கப் பயிற்சியில், பயிற்சி அளிக்கப்படுகிறது.

புத்தாக்கப் பயிற்சி என்பது புதிதாக ஆக்கப்பட்ட பயிற்சி ஆகும்.
நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள இது ஒர் அரிய சந்தர்ப்பம் ஆகும். பணியில் இருக்கும் இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க இப்புத்தாக்கப்பயிற்சி மிக முக்கிய மானதாக அமைகிறது.

இப்புத்தாக்கப்பயிற்சியில் பொது விநியோகத்திட்டம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கணினி மயமாக்குதல், அரசு திட்டங்கள், சட்டபூர்வ பணிகள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்ற பொருள் குறித்து விரிவாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
கூட்டுறவுத்துறை முக்கியமாக கடன், விற்பனை, நுகர்வோர் நலம் போன்ற பல பிரிவுகளில் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

பணியாளர்கள் திறம்பட செயல்பட வேண்டும் என்றால் திறமை இருக்க வேண்டும். திறமையாக இருக்க வேண்டும் என்றால் பயிற்சி அவசியம். பணியில் பயிற்சி, முயற்சி இவை இரண்டும் மிகவும் அவசியம். கூட்டுறவுத்துறையின் முதுகெ லும்பாக உள்ள அலுவலர்கள் பயிற்சியில் பயனடைய வாழ்த்துகிறேன் என்றார்.

இப்பயிற்சியில் கோபி சரக துணைப் பதிவாளர் ப.கந்தராஜா, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் கே.கந்தசாமி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் இரா.இராமநாதன், கோபி கூட்டுறவு நகர வங்கி துணைப் பதிவாளர் எஸ்.காந்திமணி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணைப்பதிவாளர் டி.ஸ்ரீதர், ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப்பதிவாளர் எஸ்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஈரோடு சரக துணைப் பதிவாளர் அலுவலக கூட்டுறவு சார்பதிவாளர் மு.பா. பாலாஜி வரவேற்றார்.

படிக்க வேண்டும்

spot_img