Homeபிற செய்திகள்குழந்தை தொழிலாளர் முறை அகற்ற ஒரு வாரம் விழிப்புணர்வு பிரசாரம்

குழந்தை தொழிலாளர் முறை அகற்ற ஒரு வாரம் விழிப்புணர்வு பிரசாரம்

தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் ஒரு வார காலம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு வாரமாகஅனுசரிக்கப்பட்டது .

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி சர்வதேச குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் சமீரன் உத்தரவின் பெயரில் தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதல் மற்றும் திட்டத்தின் மூலம் ஒரு வார கால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்பட்டது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் கேசவ சாமி முனைவர் மாரியப்பன் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 06.06.2022 முதல் 12.06.2022 தேதி வரை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம் மற்றும் டவுன் கால் பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் மற்றும் கடைகள் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்,ஸ்டிக்கர் விநியோகம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

விழிப்புணர்வு பிரச் சாரத்தில் ஈடுபட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகளிடம் பொது மக்கள் “ஒரு நல்ல செயலை மேற்கொள்கிறீர்கள் உங்க ளுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்” என்று தெரிவித்து ஊக்கப்படுத்தினார்கள்.

பிரச்சாரத்தின் போது ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் படி வலியுறுத்தியதோடு குழந்தை தொழி லாளர்கள் எங்கேனும் பணிபுரிவதை பார்த்தால் உடனடியாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிப்பதாகவும் உறுதியளித்தனர்.

6000-க்கும் மேற்பட்ட துண்டு பிரசு ரங்கள் பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. அரசுப் பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இன்று காந்திபுரம் பேருந்து நிலையத்தில் நடை பெற்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சமூகப்பணியியல் துறை தலைவர் முனைவர் அழகர்சாமி ஆகியோர் முன்னின்று தொடங்கி வைத்தனர்.

இதில் மாணவ ,மாணவிகள் பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து துண்டுப் பிரசுரங்களை வழங்கி பிரச்சாரம் செய்வதோடு பொதுமக்கள் மத்தியில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img