fbpx
Homeபிற செய்திகள்குரும்பா மக்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்

குரும்பா மக்கள் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு குறும்பா (குரும்பன்ஸ்) மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கி பேசும்போது, ஆடுகள் வளர்ப்போர் நல வாரியத்தின் தலைவராக குறும்பா (குருமன்ஸ்) இனத்தவரை சார்ந்தவரை நியமிக்க வேண்டும்.

பழங்குடி சான்றிதழ் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை நீக்கி தடையில்லாமல் சான்றிதழ் பெற வலியுறுத்தப்படும். குறும்பா, குறும்பர் பெயர்களை குருமன்ஸ் உட் பிரிவில் சேர்த்து அரசியலமைப்பு திருத்த மசோதா நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

கந்தசாமி முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் சுரேஷ்பாபு வர வேற்றார். மறைந்த சமூக முன் னோடிகளின் திருவுருவப் படங்கள் திறந்து வைக்கப்பட்டன.

மாநில பொதுச் செயலாளர் வீரன் முத்துசாமி, மாநிலச் செயலாளர்கள் உதகை செங்குட்டுவன், கேசவமூர்த்தி மாநிலத் துணைத் தலைவர் இராமையா, மாநில இளைஞரணி அமைப்பாளர் கௌதம், சேலம் மகேந்திர குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img