fbpx
Homeபிற செய்திகள்கிரியா பல்கலை. துணை வேந்தராக நிர்மலா ராவ் நியமனம்

கிரியா பல்கலை. துணை வேந்தராக நிர்மலா ராவ் நியமனம்

கிரியா பல்கலைக்கழகத் தின் அடுத்த துணை வேந்தராக பேராசிரியை நிர்மலா ராவ் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்,

வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் இப்பதவிப் பொறுப்பை அவர் வகிப் பார்.
கிரியா பல்கலையில் இப்புதிய பொறுப்பை ஏற்பதற்கு முன்பு 2017 மற்றும் 2022 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், பங்களாதேஷின் சிட்டகாங் நகரில் அமைந்துள்ள பெண்களுக்கான ஆசிய பல்கலைக்கழகத்தின் (AUW) துணை வேந்தராக பேராசிரியை நிர்மலா ராவ் பணியாற்றியிருக்கிறார்.

லண்டன் பல்கலைக் கழகத்தில் பிஹெச்டி (முனைவர்) பட்டத்தை பெற்றிருக்கிறார். அதிக வர வேற்பு பெற்ற இவரது சில புத்தகங்களுள், Re-shaping City Governance; Cities in Transition; Governing London; Transforming Local Political Leader ship ஆகியவையும் உள்ளடங்கும்.

பொது சேவையில் விரிவான அனுபவத்தைக் கொண்டிருக்கும் பேராசிரி யை ராவ், துணைப் பிரதமரது அலுவலகம் மற்றும் யுகே தணிக்கை ஆணையம் உட்பட பல் வேறு அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் பணி யாற்றியிருக்கிறார்.

பல ஆண்டுகளாக, பார் ஆஃப் இங்கிலாந்து அண்டு வே ல்ஸ் – ஜெனரல் கவுன்சிலின் பொது உறுப்பினராகவும், ஈலிங் ஆஸ்பிட்டல் NHS டிரஸ்டின் இயக்குனராகவும் மற்றும் ஆர்க்கிடெக்ட்ஸ் ரிஜிஸ்ட்ரேஷன் போர்டின் உறுப்பினராகவும் செயலாற்றியிருக்கிறார்.

பல்கலையின் ஆட்சி மன்ற கவுன்சிலின் செயற்கு ழுவின் தலைவர் கபில் விஸ்வநாதன் கூறியதாவது: சர்வதேச அனுபவத்துடன், பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் கல்வி சார் நிர்வாகி மற்றும் அறிஞரான டாக்டர் ராவ், முன் கணிக்க இயலாத இந்த உலகை எதிர்கொள்ள இந்த மானுடத்தை தயார்செய்ய உதவுவது என்ற கிரியா பல்கலையின் குறிக்கோள் மற்றும் செயல்திட்டத்தை முன்னின்று வழிநடத்த அனைத்து தகுதிகளையும் கொண்டவராக இருக்கிறார் என்றார்.

துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டது குறித்து நிர்மலா ராவ் கூறியதாவது:
இளமையான பல்கலை யாக இது இருக்கிற போதிலும், இன்றைய மாணவர்களுக்கு, எதிர் கால சவால்களுக்கு சிறப் பாக அவர்களை தயார் செய்கின்ற கல்வியை வழங்குவதற்கு பல்கலைக் கழகங்கள் எப்படி தங்களை தகவமைத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதில் முன்னணியில் இருக்கிறது.

நிஜமான, ஆழமான, மதிப்பும், மரியாதையும் மிக்க கலந்துரையாடல் இடம்பெறுகின்ற ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கையை கிரியா எனக்குத் தருகிறது. ஒட்டு மொத்த கிரியா சமூகத்தினரோடு கலந்துரையாடி செயல்படுவதே எனது செயல்திட்டமாக இருக்கும் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img