கிராமிய கலையை இன்றைய இளம் தலைமுறையினரிடம் சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் கோவையை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர் டாக்டர் கலையரசனை இந்திய இளைஞர்களுக்கான தூதுவராக ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இளைஞர் அமைப்பு நியமனம் செய்துள்ளது.
கோவை காந்திமா நகரை சேர்ந்தவர் டாக்டர் கலையரசன்.கிராமிய கலைகளில் ஆர்வமுடைய இவர்,பல்வேறு நாட்டுப்புற நடனம் மற்றும் கலைகளில் உலக சாதனைகள் பலவற்றை செய்து அதில் பல விருதுகளும் வாங்கி குவித்துள்ளார்.
இவரது கலைச்சேவையை பாராட்டி மத்திய மாநில அரசுகளும் இவருக்கு பல்வேறு பாராட்டுகளை நடத்தி விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது.
இந்நிலையில் இவர் காந்திமாநகரில் கிராமிய புதல்வன் அகாடமி எனும் கிராமிய கலை பயிற்சி மையத்தை துவங்கி தமிழகம் முழுவதும் கிளைகளுடன் இன்றைய இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்கு கிராமிய கலைகளை இலவசமாக கற்று தருவதோடு, அதில் பல உலக சாதனைகளை புரிய ஊக்கமளித்தும் வரு கிறார்.
இந்நிலையில் இவரது இந்த கலைச்சேவையை பாராட்டி இந்திய இளைஞர்களுக்கன தூதுவராக ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு இளைஞர் அமைப்பு இவருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கியதோடு தூதுவராகவும் நியமனம் செய்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், அழிந்து வரும் கிராமிய கலை களை மீட்கும் விதமாக இன்றைய இளைஞர்களுக்கு நாட்டுப்புற கலைகளை கற்று கொடுப்பதாக கூறிய அவர், இந்த விருது மேலும் தமக்கு ஊக்கமளிப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே சுமார் 75 நாடுகளில் இருந்து பல்வேறு பாராட்டு சான்றிதழ் மற்றும் விருதுகளை இவர் வாங்கி குவித்தவர் என்பது குறிப்பிடதக்கது.