கிராமப்புற மகளிர் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த திறன் வளர்க்கும் பயிற்சி ‘ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ மற்றும் ‘ஷெப்லர் இந்தியா’ சார்பில் 45 நாள் இலவசமாக வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை என்ற ஊரில் மகளிர் தொழில் மேம்பாடு அடைவதற்காக இலவசமாக தொழில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்காக சிறப்பு ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 30 பேருக்கு அழகு கலை பயிற்சியும் 53 பேருக்கு நவீன தையல் கலை பயிற்சியும் வழங்கப்பட்டது.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிர்வாக இயக்குநர் டாக்டர் கல்பனா சங்கர் ஆலோச னைப்படி, ஷெப்லர் இந்தியா நிறுவன நிதி உதவியுடன் கிராமப்புற மகளிரின் குடும்ப வருமானத்தை உயர்த்திடும் வகையில் இந்த பயிற்சிகள், தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டாரத்திலுள்ள மகளிருக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
45 நாள் வழங்கப்பட்ட இந்த பயிற்சியில் முழுமையாக பங்கு பெற்ற அனைத்து மகளிருக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தேன்கனிக் கோட்டையில் நடை பெற்றது.
நிகழ்வில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் பொது மேலாளர் ராபர்ட்ராஜா, முதன்மை மேலாளர் அருள் குமார், ஷெப்லர் இந்தியா நிறுவனத்தின் அலுவலர் பரத் ஆகி யோர் பயிற்சி பெற்ற மகளிர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கினர்.
பயிற்சியில் முழுமையாக கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் பயிற்சி பெற்ற திறன் சார்ந்த தொழில் மேம்பாடு அடைவதற்கான தொடர் ஆலோசனைகளையும் அலுவலர்கள் தெரிவித்தனர்.