fbpx
Homeபிற செய்திகள்கால்பந்து போட்டி: டிராக் போர்ஸ் அணி அபாரம்

கால்பந்து போட்டி: டிராக் போர்ஸ் அணி அபாரம்

டிரீம் லைட் ஸ்போர்ட்ஸ் சார்பாக கோவை செல்வபுரத்தில் க்ராஸ் பார் ஸ்போர்ட்ஸ் செயற்கைப் புல் மைதானத்தில் நடந்த மாநில அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டி நடந்தது. இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கு பெற்றன. இதில் மூன்று பிரிவாக போட்டி நடைபெற்றது.

20 வயதுக்குட்பட்ட பிரிவு இறுதி ஆட்டத்தில் கற்பகம் கல்லூரி அணி 1-&0 கோல் கணக்கில் அக்வா சப் அணியை வென்றது. 17 வயதுக்குட்பட் டோருக்கான போட்டியில் ட்ராக் ஃபோர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 4-0 கோல் கணக்கில் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வென்றது.

15 வயதுக்குட்பட்டோ ருக்கான போட்டியில் எம் எஸ் கால்பந்து அகாடமி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வடவள்ளி பிரைட் அணியை வீழ்த்தியது.

பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக எச் டி எஃப் சி வங்கி சீனியர் மேனேஜர் பிரேம்நாத் பங்குபெற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கினார்.

ட்ரீம் லைட் ஸ்போர்ட்ஸ் நிறுவனர்கள் சுல்தான் மற்றும் அர்ஷத் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img