காரிமங்கலம் ஊராட் சியில் தார்சாலைகள் மறு சீரமைக்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இண்டமங்கலம் ஊராட்சி, கன்னிப் பட்டியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் தார் சாலைப் பணிதரமாக அமைக்கப்படவில்லை என சமூகவலைதளங்களில் வரப்பெற்ற செய்தியை, கூடு தல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.ஆர்.வைத்தியநாதன் பார்வையிட்டார்.
சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்களை தொடர்புகொண்டு, உடனடியாக இச்சாலை தரமாக அமைக்கப்பட வேண்டும் என அறிவு றுத்தி நடவடிக்கை மேற்கொண்டார்.
அச்சாலை தரமாக மறுசீரமைப்பு செய்யப் பட்டது. சீரமைப்பு பணி யை வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கிருஷ்ணன், பொறியாளர்கள் கோவிந்தராஜ், முருகன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இண்டமங்கலம் ஊராட்சி ராஜ் கொட்டாய் முதல் பிகேபள்ளம் வரை 600 மீட்டர் தூரத்திற்கு 14-வது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் 11.650 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை கடந்த 3 நாட்களுக்கு முன் அமைக்கப்பட்டிருந்தது.
இப்பணி சரியாக செய்யவில்லை என சமூகவலை தளங்கள் மற்றும் தினசரி நாளிதழ்களில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி வைத் தியநாதன் உத்தரவின் பேரில் மீண்டும் புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டது.