கோவை மாவட்டம் சர்க்கார் பதியிலிருந்து திருமூர்த்தி அணைக்கு செல்லும் கான்டூர் கால்வாய் புனரமைக்கப்பட்டு வருவதை நேற்று முன்தினம் (ஜூலை17) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் செய்தியாளர் களிடம் தெரிவித்ததாவது:
முதல்வர் ,நமது தேசத்தின் முதுகெலும்பாக விளங்கும் வேளாண்மை துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துநீர்ஆதாரங்களை பெருக்குதல் குளங்கள் சீரமைப்பு,வ னவிஸ்தரிப்பு, புதியஅணைகள் கட்ட சாத்தியக்கூறுகள் ஆராய்தல் போன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முதல்வரின் ஆணைக்கிணங்க ஆனை மலையாறு -நல்லாறு திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசும் கேரளா அரசும் இணைந்து 1958-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பரம்பிகுளம் ஆழியாறுபாசனத் திட்டம் உருவாக்கப்பட்டது.
பரம்பிகுளம் மலைப்பகுதிகளை குடைந்து சர்க்கார்பதிக்கு கொண்டு வந்து அங்கே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
அதன்பிறகு ஆழியாறு அணைக்கும் திருமூர்த்தி அணைக்கும் கான்டூர் கால்வாய் வழியாக எடுத்துச்செல்லப்படுகிறது.
இக்கால்வாய்50 கி.மீ. நீளத்திற்கு மலைப் பகுதியையொட்டியும் மலையை குடைந்தும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆழியார்அணை திருமூர்த்தி அணை ஆகிய இரு அணைகள் மூலம் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் பயனடைந்து வருகின்றன.
கலைஞர் முதல்வரா கஇருந்தபோது, அவரின் உத்தரவின்படி 2009-ம் ஆண்டு சுமார்ரூ.185 கோடி மதிப்பில் கான்டூர் கால்வாயில் கான்கிரீட்தளம் அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக நீர்கசிவு முற்றிலுமாக தடுக்கப்பட்டது. சுமார் 1500 கனஅடி தண்ணீர் சர்க்கார் பதியிலிருந்து திருமூர்த்தி அணைக்கு செல்லும் வகையில் தளம் போடப்பட்டது.
மேலும் 6 கி.மீ.தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மீதமுள்ளது.சரிவர பராமரிப்பு செய்யப்படாத காரணத்தாலும் மலைப்பகுதிகளுக்கு அருகில் இருப்பதாலும் சுவரின் பக்கவாட்டில் மரங்கள் உருவாகி இருப்பதாலும், கரையின் வலதுபுறம் அணைகட்டும்போது அமைக்கப்பட்ட பக்கவாட்டு சுவர் பழுதடைந்துள்ளது.
இதுபோன்று மரங்கள் விழுவதாலும் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டுசெல்வதில்தடை ஏற்படுகிறது.
கான்டூர் கால்வாய் புனரமைக்கும் பணிகள்தற்போது நடைபெற்று வருகின்றன. பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பாசனத்திற்கு எவ்வித தடையும் இல்லாமல் தண்ணீர்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதன்படிகடந்தவாரம் 9 மற்றும் 10 ஆகிய இருதினங்களில் மேல் ஆழியாறு காடம்பாறை அணை தேவியாறு நீர்வீழ்ச்சி வாண்டல் தடுப்பணை மேல்நீரர் அணைகீழ் நீராறு அணைமானம் பள்ளியில் உள்ள சோலையார் மின்உ ற்பத்திநிலையம் 1 மற்றும்மின் உற்பத்தி நிலையம்- 2 ஆகியபகுதிகளில் நேரில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆனைமலையாறு – நல்லாறுதிட்டம் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று, இத்திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.
ஆழியார் பகுதியில் வி.கே.பழனிச்சாமி கவுண்டருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் ஆழியாறு அணைப்பகுதியிலும்அமைச்சர்மு.பெ.சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை (நீர்வளஆதாரம்) கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் விவேகானந்தன் பொதுப் பணித்துறை சயற்பொறியாளர்(கட்டடம்) ரங்கநாதன், உதவி பொறியாளர் லீலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



