fbpx
Homeபிற செய்திகள்காந்தி மற்றும் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

காந்தி மற்றும் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

அண்ணல் காந்தியடிகள் மற்றும் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் சேலம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கினார்.

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மண்டல தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் பவானி உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img