உத்தமர் காந்தியடிகளின் 75வது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வின்போது அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.



