பட்டியல் இன விடுதலைப் பேரவையின் சார்பில் நடைபெற இருந்த காத்திருப்புப் போராட்டம், ஆதிதிராவிடர் நலத்துறை தனிவட்டாட்சியர் நேரில் அழைத்து பேசி, ஒருவார காலத்தில் நடவடிக்கை எடுத்துபட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் ,போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழூர் வட்டம் வேட்ட மங்கலம் கிராமம் நத்தமேடு பகுதியில் வாழும் பட்டியலின தொம்பன் சமூகமக்களுக்கு புலஎண் 1054 புலஎண் 729/1-ல் விரைவாக வழங்குவதாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கை தமிழர்களுக்கு 370 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மறுவாழ்விற்கு விதி எண் 110-ன் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்புசெய்த முதல்வருக்கு இம்மன்றம் நன்றி பாராட்டுகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலை ஒன்றியம் பொருந்தலூர் வருவாய் கிராமம் தெலுங்குபட்டியில் உள்ள 67 ஏக்கர் பஞ்ச மிநிலங்களை மீட்டுபஞ்சமர்களான ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு விவசாயம் மேற்கொள்ள வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



