fbpx
Homeபிற செய்திகள்பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் ஓவியப் போட்டி

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழியில் ஓவியப் போட்டி

உடுமலை கலிலியோ அறிவியல் கழகத்தின் சார் பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஹிரோஷிமா நாகசாகி தினத்தை ஒட்டி பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் இணைய வழி யில் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் ஹிரோஷிமா நாகசாகி தினத்தை அனுசரிக்க படு வதன் நோக்கத்தை மைய மாக வைத் தும், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மனப் பான்மையை பள்ளி மாண வர்களிடையே தூண்டும் விதமாகவும் பல்வேறு தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

உடுமலை சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி, தமிழகம் முழு வதும் இருந்து 1500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். மின்னஞ்சலில் அனுப்பி வைத்த படைப்புகளில் 40 படைப்புகள் தேர்ந்தெ டுக்கப்பட்டன.

அதில் உடுமலை பகுதியில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு பிரிவினருக்கான ஓவியப் போட்டியில், எஸ்கேபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவன் தர்ஷித் இரண்டாமிடமும், பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி சின்றல்லா ஷெர்லின் மூன்றாமிடமும், பெத்தேல் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி அஸ்வினி ஆறுதல் பரிசும் பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா, காந்தி நகர் கலிலியோ அறிவியல் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

கலிலியோ அறிவியல் கழக உறுப்பினர் சதீஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உடுமலை வாசவி கிளப் உறுப்பினர் ஸ்ரீ ஹரி மாணவர்களை பாராட்டி பேசினார்.

பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சரவணன், இதுபோன்ற இணைய வழி போட்டிகளில் வீடுகளிலிருந்து பங்கேற்பது மாணவர்களை ஊக்குவிப்பதாக இருக்கும் என்றார்.

ஏற்பாடுகளை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண் ணபிரான் செய்திருந்தார். தமிழகம் முழுவதும், 35க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அஞ்சல் வழியாக பரிசுகளும் சான்றிதழ்களும் அனுப்பி வைக்கப்பட்டன.

பங்கேற்ற அனைவருக்கும் இணையவழிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img