fbpx
Homeபிற செய்திகள்கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 29, 30-ம் தேதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்: பள்ளிகளில் கொண்டாட்டங்களுக்கு...

கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 29, 30-ம் தேதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம்: பள்ளிகளில் கொண்டாட்டங்களுக்கு தடை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு வரும் 29, 30-ம் தேதிகளில் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. பள்ளிகளில் எந்த வித மான நிகழ்ச்சிகளும், கொண்டாட்டங்களும் நடத்தக் கூடாது என கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று(ஆக.23) மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததா வது:
கோவை மாவட் டத்தில், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் அளித்த முழு ஒத்துழைப்பு மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் கொ ரோனா தொற்று சற்று குறைந்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவின்படி, வரும் செப். 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் 9,10,11,12-ம் வகுப்புகள் அனைத்து கல்லூரி வகுப்புகள், அனைத்து பட்டயப் படி ப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறி முறைகளை கடைபிடித்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிக் கூடங்களில் வகுப்பறைகள் மற்றும் பிற பகுதிகளை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். புதர்கள், டயர்கள், பழுதடைந்த பொருட்களை அகற்றிட வேண்டும். கடந்த ஒன் றரை ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாமல் இருந்துள்ளன.

அனுமதிக்கப்பட்ட கல்லூரிகள், பள்ளிகள், காப்பகங்கள் மற்றும் அங் கன்வாடி மையங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள், காப்பாளர்கள் அனை வரும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை சம்மந்தப்பட்ட கல்வி, பள்ளி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருப்பின் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

கோவை மாவட்டத்தில் 192 அரசுப் பள்ளிகள் உள்ளன. அனை த்து பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத, பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை உடனடியாக கூட்டி செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும்.
கல்லூரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோர் களுக்கு 29.08.2021 முதல், 30.08.2021 வரை தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் அரசு வழிகாட்டி நெறிமுறை களை பின்பற்றி மாண வர்களை உரிய சமூக இடைவெளியுடன் அமர வைக்க வேண்டும்.
அதற்கு தகுந்தாற் போல் வகுப்பறைகளில் நாற் காலிகள் அல்லது பெஞ்சுகளை அமைத்து, 6 அடி இடைவெளியில் அவர்களை உட்கார வைக்க வேண்டும்.

அனைத்து ஆசி ரியர்கள், மாணவர்கள், பிற பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். நுழைவு வாயிலில் கை சுத்திகரிப்பான்கள் வைப்பதுடன், தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களை கட்டாயம் அனுமதிக்கக் கூடாது. அவர்களை உடனடியாக அருகில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பள்ளிகளில் கைகளை கழுவுவதற்கு சோப்பு, சானி டைசர் வைக்க வேண்டும்.
மாணவர்கள் உள்ளே வரவும், வெளியே செல்லவும் தனித்தனி வழிகளை பின்பற்ற வேண்டும்.

சிறிய அறைகளை கொண்ட பள்ளிகள், தங்கள் பள்ளிகளில் உள்ள கணினி அறை, ஆய் வகம், நூலகம் ஆகிய இடங்களிலும் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்து வகுப்புகளை நடத்தலாம்.

பள்ளிகளில் எந்த விதமான நிகழ்ச்சிகள் அல்லது கொண்டாட்டங்களையும் நடத் தவும் அனுமதி கிடையாது.

பள்ளிகளை திறப்பதற்கு முன் போ திய முன்னேற்பாட்டு பணிகளை செய்வதுடன், தவறாது அரசு வழிகாட்டி நெறிமுறைகளையும் அனைத்து பணிகளும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கே.கவிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆர்.சரண்யா, முதன்மை கல்வி அலுவலர் என்.கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img