இந்திய திருநாட்டின் 75&ஆவது சுதந்திர தினவிழாவினையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சுசீலா ஆகியோர் உள்ளனர்.



