“ஒவ்வொரு இந்தியருக்கும், சொத்துக்களை உருவாக்கித் தர வேண்டும் என்ற விருப்பத்தோடும், நோக்கத்தோடும் செயல்பட்டு வருகிறது எச்டிஎப்சி சொத்து மேலாண்மை நிறுவனம்,” என அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி நவ்நீத் முனட் பேசினார்.
பங்குதாரர்களிடையே அவர் மேலும் பேசியதாவது:
எச்டிஎப்சி சொத்து மேலாண்மை கம்பெனி, மரபு சார்ந்த, மக்கள், முறைகள், தயாரிப்புகள், செயல்திறன், பங்களிப்பு மற்றும் தளங்கள் என அனைத்து வகைகளிலும் வாய்ப்புகளை மூலதனமாக்கும் நிலையை பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக வலுவான வளர்ச்சியை மீயுச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பெற்றிருந்தாலும், இந்தியாவின் பயனாளர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.
தேசிய அளவில் நோய் தொற்று குறைந்து வரும் இந்த சமயத்தில், பொருளாதாரம் நிலையான மீட்சியடையும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளிப்படையாக செயல்பட அனைத்து விதத்திலும் மக்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டுள்ளனர்.
வாடிக்கையாளர்களை மகிழ்ச்சிப்ப டுத்தும் வைகையில், எங்களது டிஜிட்டல் திறன்களை வலுப்படுத்துவதை தொடர்ச்சியாக செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டு எச்டிஎப்சி டிவிடென்ட் ஈல்டு நிதி மற்றும் எச்டிஎப்சி பாங்க் இடிஎப் ஆகியவற்றை உருவாக்கினோம். சந்தை மிகவும் உயர்ந்துள்ளது.
வங்கிகளில் குறைவான வட்டியில் கடன் கிடைக்கிறது. இந்த சமயத்தில் நல்ல வருவாய் தரும் சமநிலைப்படுத்தப்பட்ட நிதி திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர்.
எங்களது ஹைபிரிட் நிதி மற்றும் சொத்து பங்களிப்பு கொண்ட தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் தங்களது சொத்து வகைகளை சமநிலைப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக இருக்கும்.
அதோடு சந்தை வளர்ச்சிக்கு ஏற்ப இது செயல்படும். விரைவில் அடுத்த சில காலாண்டுகளில் எங்களது திட்டங்களை விரிவாக்கம் செய்வதோடு, குறிப்பிட்ட துறை சார்ந்த திட்டங்கள், சர்வதேச சந்தை மற்றும் நிலையான யுக்திகளை உருவாக்க உள்ளோம்.
எங்களது தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டியாகவும், வளர்ச்சிக்கான திசை காட்டி வரும் செபி க்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு, முனாட் பேசினார்.



