Homeபிற செய்திகள்ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா: பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.

இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தர்கா வளாகத்தில் ஜூன் 11-ந்தேதி மாலை 4 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது.ராமநாதபுரம் போலீஸ் கண்காணிப்பாளர் தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 24-ந்தேதி அதிகாலை தர்ஹாவிற்கு சந்தக்கூடு ஊர்வலம் வந்தடைந்து
பின்னர் தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் செய்யது,உப தலைவர் சாதிக் பாட்ஷா ஆகியோர் முன்னிலையில் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஜூன் 30-ந்தேதி கொடியிறக்கப்பட்டு பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img