fbpx
Homeபிற செய்திகள்எஸ்.பி.ஐ.ஓ மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

எஸ்.பி.ஐ.ஓ மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு

கோவை சொக்கம்புதூர் அருகிலுள்ள எஸ்.பி.ஓ. மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் மாணவர்களுக்கும் மாணவியருக்கும் ஆசிரியர்களுக்கும் தனித்தனியே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ் செல்வகுமார் தலைமை தாங்கினார்.
பள்ளி முதல்வர் ஜீவா செந்தில் வரவேற்று பேசினார்.

பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ராம்குமார், விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தின ராக அரசு கூடுதல் வழக்கறிஞர் சிவராம கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, பள்ளி மாணவ, மாண விகள் செயல்பட வேண்டிய விதம், அவர்களுக்கு தேவையற்ற பிரச்சனை ஏற்படும் போது மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் எப்படி அணுக வேண்டும் என்பதையும் அவர்களுக்கு சட்டத்தில் என்னென்ன வழி‌ வகைகள், மாணவ மாணவிகளுக்கு அரசு வழங்கி உள்ள சலுகைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியினை பள்ளி ஆசிரியர் சுஜாதா தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img