ஏர் கம்ப்ரஷர் உற் பத்தி நிறுவனமான எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், கடந்த 2021 மார்ச் 31ல் முடிவடைந்த இறுதி காலாண்டு மற்றும் நிதியாண்டின் முடிவுகளை அறிவித்துள்ளது. 2019- 20 இறுதி காலாண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த இறுதி காலாண்டில், வரிக்கு பின் நிகர லாபம் 1.05 கோடி ரூபாயிலிருந்து 43.36 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 – 20 நிதியாண்டினை ஒப்பிடுகையில் கடந்த நிதியாண்டில் நிகர லாபம், ரூ.42.57 கோடியிலிருந்து, ரூ.102.49 கோடியாக உயர்ந் துள்ளது.
நான்காவது காலாண் டில் நிகர விற்பனை, ரூ.455 கோடியிலிருந்து ரூ.610 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 – 20 ல் நிதியாண்டில் ரூ.1829 கோடியாக இருந்த நிகர விற்பனை, 2020 – 21 ல், ரூ.1924 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2019-20ம் ஆண் டின் இறுதி காலாண்டில் வரிக்கு பின் தனிப்பட்ட லாபமான 42.01 கோடி ரூபாயை ஒப்பிடுகையில், தற்போதைய இறுதி காலாண்டில் ரூ. 48.85 கோடியாக உயர்ந்துள்ளது. நிதியாண்டினை ஒப்பிடு கையில் இந்த லாபம் ரூ.100.42 கோடியிலிருந்து, ரூ.105.09 கோடியாக உயர்ந்துள்ளது.
கம்பெனியில் நிர்வாக குழு ஒவ்வொரு பங்கிற்கும், 80 பைசா ஈவுத்தொகையாக ( டிவிடென்ட்) வழங்க சிபாரிசு செய்துள்ளது. இது, பங்குதாரர்களின் ஒப் புதலுக்கு உட்பட்டது.
நான்காவது காலாண் டினை ஒப்பிடுகையில், கம்ப்ரஷர் உள்நாட்டு விற் பனை நன்றாக இருந்தது. நிதியாண்டு அடிப்படையில் வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போதுள்ள நிலையில் சர்வதேச அளவிலான வணிகம் நன்றாக உள்ளது. மிகவும் சவாலான நிலை யில், வாகனத்துக்கான வணிகம், கடந்த ஆண்டி னை காட்டிலும் மேம்பட் டுள்ளது. வரும் 2021-22 ல் தொற்று நோய் பரவல் வணிகப்பாதிப்பை யாரும் எளிதில் மதிப்பீடு செய்ய இயலாத நிலை உள்ளது. இருப்பினும், இவற்றையும் கடந்து நன்றாகவே செயல்படும் என எதிர்பார்க்கலாம்.