Homeபிற செய்திகள்எம்டிசிஆர்சி கொண்டாடிய முப்பெரும் விழா

எம்டிசிஆர்சி கொண்டாடிய முப்பெரும் விழா

கோவையில் இயங்கி வரும் லாப நோக்கில்லாத தொண்டு நிறுவனம் மரபணு பரிசோதனை ஆலோசனை, ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிறுவ னமாகும் (MDCRC).


இந்நிறுவனம் டுசீன் தசைசிதைவு நோய்க்கான பரிசோதனைகள், பராமரி ப்பு மற்றும் தடுப்பு வழிகள் ஆகியவற்றை இலவசமாக வழங்கி வருகிறது.

சென்னையில் 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, மரபணு பரிசோதனை நிலையமாக செயல்பட்டு வந்த இந்நிறுவனம் 2011- ம் ஆண்டு முதல் மரபணு பரிசோதனை, ஆலோசனை, ஆதரவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக 10 வருடங்களை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

‘2022-ம் ஆண்டிற்குள் தமிழகத்தில் உள்ள டுசீன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளை கண்டறிந்து அடுத்த தலைமுறைக்கு இந்நோய் வராமல் தடுப்பதே எம்டிசிஆர்சியின் முக்கிய நோக்கமாகும்.’

ஒவ்வொரு வருடமும் எம்டிசிஆர்சியில் டுசீனால் பாதிக்கப்பட்ட குழந்தை களின் குடும் பங்களுக்கு அன்னையர் தினம், தந்தையர் தினம், யோகா தினம் போன்ற சிறப்பு தினங்கள் 2017 முதல் கொண்டாடப்பட்டு வருகின்றன. கொரோனா காரணமாக தடைப் பட்டிருந்த இந்நிகழ்ச்சி இந்தாண்டு நடந்தது.

விழாவை தொடங்கி வைத்து, அன்னையர் தினம், தந்தையர் தினம் மற்றும் யோகா தினங்களை நாம் ஏன் கொண்டாடுகிறோம்? அவற்றின் முக்கியத்துவம் என்ன? நலம் பேணுதல் ஆகியவற்றை பற்றி எம்டிசிஆர்சி நிறுவனர் டாக்டர் பி.ஆர்.லட்சுமி பேசினார்.

யோகா மற்றும் உடல் நலம் பற்றி இயற்கை மருத்துவர் சுப்பிரமணியன் பேசினார்.
மகப்பேறு மருத்துவர் சசித்ரா தாமோதரன் டுசீன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை களின் தாய்மார்கள் தங்கள் உடல் நலம் பேணு தல் அவசியம் என்று எடுத்துரை த்தார்.

தன்னம்பிக்கை பேச்சாளர் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், பெற்றோர் மற்றும் உறவுகளின் முக்கியத்துவம் பற்றியும் அவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் சிறு தருணங்கள் பற்றியும் மிக அழகாக எடுத்துரைத்தார்.

நினைவு பரிசளிப்புகளும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கான சிறு நடன நிகழ்வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

படிக்க வேண்டும்

spot_img