fbpx
Homeபிற செய்திகள்ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தக் கோரி மனு

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தக் கோரி மனு

தமிழக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப் பணன் எம்.எல்.ஏ. தலைமையில், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கவுன்சிலர்கள் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு கொடுத் தனர். மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக எஸ்.விஜய நிர்மலா உள்ளார். அவர் ஊராட்சி ஒன்றி யக்குழு கூட்டத்தை நடத்தாமல் அவரது கணவர் நடத் துகிறார். நிர்வாகத்தையும் அவரே கவனித்து வருகிறார்.

எனவே ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்வின்போது விஜயநிர்மலாவுக்கு வழங்கிய ஆதரவை 12 கவுன்சிலர்கள் வாபஸ் பெற விரும்புகின்றனர்.

எனவே அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மற்றொரு ஊராட்சி ஒன்றியத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு புதிய தலைவர் தேர்ந் தெடுக்கப்பட்டு உள்ளார்.

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 12 கவுன்சிலர்கள் ஒரே அணியில் பெரும்பான் மையுடன் இருக்கும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல், பெரும்பான்மை இல்லாத ஒருவரை ஒன்றிய தலை வராக செயல்பட சட் டப்படி அனுமதிக்க முடியாது.

எனவே தற்போதைய தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

படிக்க வேண்டும்

spot_img