fbpx
Homeபிற செய்திகள்உலக மனித கடத்தலுக்கு எதிரான எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி- ராமநாதபுரம் கலெக்டர் துவக்கி வைத்தார்

உலக மனித கடத்தலுக்கு எதிரான எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி- ராமநாதபுரம் கலெக்டர் துவக்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், உலக மனித கடத்தலுக்கு எதிரான எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் இருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: -மனித கடத்தல் என்பது உலகின் மூன்றாவது பெரிய குற்றத் தொழிலாகும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஆயுதக் கடத்தலுக்குப் பின்னால், இது நாடு கடந்த குற்றவியல் அமைப் புகளில் வேக மாக வளர்ந்து வரும் நடவடிக்கையாகும்.

மனித கடத்தல் சர்வ தேச மரபுகளால் மனித உரிமை மீறலாக கண்டிக்கப்படுகிறது. மனித கடத்தல் உள்ளூர் அல்லது உள்நாட்டு மாவட்டங்களில் நிகழலாம் என்றாலும், இது சர்வதேச தாக்கங் களைக் கொண் டுள்ளது. ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடுகள் 2013-ல் ஒன்று கூடி ஒரு தீர்மானத்தை இயற்றின.

அதன்படி ஜூலை 30-ம் தேதி இழிவணிகத்துக்காக மனிதர்களைக் கடத்துவதற்கு எதிரான சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

கடத்துலுக்குப் பலியாகும் மனிதர்களின் சமூகச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்களுக் கான மனித உரிமைகளை மேம்படுத்தவும்,சர்வதேச அளவில் குற்ற வணிகத்துக்காக மனிதர் களைக் கடத்துவது மற்றும் மனித குலத்துக்கு விரோதமான இந்தக் கொடுமையை அழித்தொழிக்க உலக ளாவிய அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ஆகியவற்றின் மீது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத் துவதே இந்த தினத்தை கடைப் பிடிப்பதன் நோக் கமாகும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்த லைவர் தெரிவித்தார்.

முன்னதாக ராமநா தபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி யில் பள்ளி மாணவ, மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதி ரான குற்றத் தடுப்பு உன்னிகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்தியநாராயணன் அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img