உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மத்திய மாவட்டம் விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் பெண்கள் உரிமைக்கான கருத்தரங்கம் மாவட்டத் தலைவர் காமிலா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் சாஜிதா வரவேற்றுப் பேசினார்.
கருத்தரங்கில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் மகளிர் அணி அமைப்பாளர் சார்பில் சகோதரி கல்பனா, மற்றும் விமன்ஸ் இந்திய மூமன்ட் கோவை மண்டல தலைவர் பரிதா ஆகியோர் இந்த தேசத்தில் சமகால அரசியலிலும் சமூக பணிகளிலும் சமூக உரிமை போராட்ட களங்களிலும் பெண்களின் பங்களிப்பு குறித்து கருத்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக மாவட்டத் இணைச் செயலாளர் சகோதரி சல்மா நன்றி கூறினார்.