சிறு விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டத்தினை தொடங்கி வைத்து , உதகை அல்ட்ரா , ரோட்டரி ஒட்டகமந்து சங்கத்துடன் இணைந்து நடத்திய மாபெரும் 90 கி.மீ. மாரத்தான் – 2023 ஓட்டத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்து , 30 கி.மீ. மாரத்தான் ஓட்டத்தில் தனது 140 – வது மாரத்தான் ஓட்டத்தினை மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாவது :
ஊட்டி அல்ட்ரா அமைப்பு தொடர்ந்து பல ஆண்டு காலமாக மாரத்தான் போட்டி நடத்தி வருகிறார்கள்.அதன் மூலம் பல வகையான சமூக கண்ணோட்டத்துடன் பல பிரச்சனைகளை முன்னிறுத்தி , அதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் , பல்வேறு நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்து வருகிறார்கள் . அந்த வகையில் இந்த ஆண்டு ஒரு சிறு விளையாட்டு பூங்கா அமைப்பதற்கான திட்டத்தினை தொடங்கி வைப்பதற்காகவும் , உதகை உருவாகி 200 ஆண்டுகள் நிறைவுபெறுவதை ஒட்டியும் , 90 கி.மீ , 60 கி.மீ , 30 கி.மீ , 15 கி.மீ , மாரத்தன் போட்டிகள் நடைபெறுகிறது . இதில் நான் 30 கிலோ மீட்டர் மாரத்தன் போட்டியில் கலந்து கொள்கிறேன். இது எனது 140 – வது மாரத்தான் ஓட்டமாகும். இந்த மாரத்தனில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றார்
மேலும், இந்தியாவில் 50 க்கும் கீழே இருந்த தொற்றின் எண்ணிக்கை , தற்பொழுது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை ஆக்சிஜன் வசதி , படுக்கை வசதி , மருந்து மாத்திரை வசதி ஆகியவை மிகப்பெரிய அளவில் தயார் நிலையில் உள்ளது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆயிரம் படுக்கை வசதியுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது அதேபோல் மேட்டுப்பாளையம் பகுதியில் 20 படுக்கை வசதிகளுடன் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த XBB , BA2 வைரஸ் சிறிய பாதிப்பு ஏற்படுவதால் , பொதுமக்கள் எந்த பதற்றமும் அடைய வேண்டாம் என்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் , துணை இயக்குநர் ( சுகாதார பணிகள் ) மரு.பாலுசாமி , மண்டல மேலாளர் ( தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ) வெங்கடேஷன் , உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி , மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர் , உதகை வட்டாட்சியர் ராஜசேகரன் , உதகை அல்ட்ரா இயக்குநர் கண்ணன் சுந்தரராஜன் , ரோட்டரி ஒட்டகமந்து நிர்வாகி கமலேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



