fbpx
Homeபிற செய்திகள்‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் தூத்துக்குடி மக்கள் மனதார நன்றி

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டம் தூத்துக்குடி மக்கள் மனதார நன்றி

செய்வதை சொல்வோம், சொல்வதை செய்வோம் என்று தாரக மந்திரத்தை செயல்படுத்தி, வாக்குறுதியை நிறைவேற்றிவரும், தமிழகத்திற்கு விடியல் தரும் தலைவர் முதல்வரை, தூத்துக்குடி மக்கள் மனதார பாராட்டுகின்றனர்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் தமிழக மக்களின் நலனை காக்கும் வகையில் பல எண்ணற்ற திட்டங்களை வழங்கி உள்ளார்.

கடந்த காலத்தில் அவர் முதல்வராக இருந்தபோது ஏழை எளியமக்கள் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளும் வகையில் வண்ண தொலைக்காட்சி பெட்டியை வழங்கினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் இந்தியாவில் எந்தமாநிலத்திலும் இல்லாத வகையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.

விவசாய கடன்களை தள்ளுபடிசெய்தார். தமிழகம் முழுவதும் போக்குவரத்தினை எளிமையாக்கும் வகையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

அதன்வகையில் முதல்வர் தேர்தல் வாக்குறுதியின் படிதேர்தலுக்கு முன்புஉங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

முதல்வராக பொறுப்பேற்றவுடன் இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என எதிர்க்கட்சிதலைவராக இருந்தபோது முதல்வர் உறுதி அளித்தார்.

அதன்படி முதல்வராக பொறுப்பேற்ற உடன் இத்திட்டத்திற்குஎன தனிதுறை மற்றும் சிறப்பு அதிகாரியைநியமித்து, தற்போது அந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 10,762 மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மனுக்களின் மீதுநடவடிக்கைஎடுப்பது தொடர்பாக ஒவ்வொருதுறையிலும் ஒருபொறுப்பு அலுவலர்நியமிக்கப்பட்டுநடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இம்மனுக்களின்மீதானநடவடிக்கைதொடர்பாகசமூகநலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பெ.கீதாஜீவன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

உங்கள்தொகுதியில் முதலமைச்சர்திட்டத்தின் கீழ் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி அரசு மருத்துவமனைவளாகத்தில் 03.7.2021 நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடிநாடாளுமன்றஉறுப்பினர்கனிமொழிகருணாநிதி, 668நபர்களுக்குரூ.1கோடியே 70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

வீட்டுமனைப்பட்டா
இந்ததிட்டத்தின் மூலம் பயனடைந்த பூமாரி தெரிவித்ததாவது:
நான் தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானந்தல் கிராமத்தில் வசித்துவருகிறேன். கடந்த15 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறேன்.

தமிழக முதல்வர் பிரசாரத்திற்காக எங்கள் கிராமத்திற்கு வருகைதந்த போது வீட்டுமனை பட்டா வேணும் என்ற கோரிக்கை வைத்து மனுவை கொடுத்தேன். தற்போது தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.

இதன்மூலம்நான் எதிர்பார்க்காதவ கையில் உடனே நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டாதந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தையல்மெஷின்
இந்ததிட்டத்தின் மூலம் பயனடைந்த பேராச்சி செல்வி தெரிவித்த தாவது :நான்தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாதரூர் பட்டியில் வசித்து வருகிறேன்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தில் மனு அளித்தேன். ஸ்டாலின் முதல்வர் ஆனதும்இத்திட்டத்தின் மூலம் மனுவினை பரிசீலனை செய்து தையல் மெஷின் வழங்கினார்.

நான் தையல்வகுப்புபடித்துள்ளேன். இதற்கு முன்னதாகபுடவைக்கு குஞ்சம் கட்டுவது புடவை ஓரம் அடிப்பது. பிளவுஸ் தைப்பதுஎன வேலைபார்த்து வந்தேன். இதில் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

எனது வாழ் வாதாரத்தினை முன்னேற்றும் வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தையல் மெஷின் வழங்கினார்.

இதன்மூலம் எனது வாழ்வாதாரத்தினை பெருக்கும் வகையில் தையல் மெஷின்மிகவும்பயன்உள்ளதாகஉள்ளது.

இத்திட்டத்தின்மூலம்தையல்மெஷின்வழங்கியமுதல்வருக்குஎங்களதுகுடும்பத்தின்மூலம்உளமார்ந்தநன்றியைதெரிவித்துக்கொள்கிறேன்.

பாண்டுபத்திரம்
இந்ததிட்டத்தின் மூலம் பயனடைந்த முத்துமாரிதெரிவித்ததாவது:
தூத்துக்குடி மாவட்டம் பிஎம்சிகாலனியில் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு இரண்டுபெண்குழந்தைகள்.கடந்த வருடம் சமூகநலத்துறையில் 2 பெண் குழந்தைகள் திட்டத்தின் கீழ்மனு அளித்தோம் தற்போது தமிழகமுதல்வர் இத்திட்டத்தின் கீழ் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ரூ.50,000-க்கான பாண்டு பத்திரத்தை வழங்கினார்.

இதன் மூலம் எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இந்ததொகை உதவியாகஇருக்கும். முதல் வருக்கு எங்களது குடும்பத்தின் மூலம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்வதை சொல்வோம், சொல்வதை செய்வோம் என்றுதாரக மந்திரத்தை செயல்படுத்தி வாக்குறுதியை நிறைவேற்றிவரும் தமிழகத்திற்கு விடியல் தரும் தலைவர் முதல்வரை தூத்துக்குடி மக்கள் மனதார பாராட்டுகின்றனர்.

தொகுப்பு:
வெ.சீனிவாசன்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
தூத்துக்குடி.

படிக்க வேண்டும்

spot_img