fbpx
Homeபிற செய்திகள்உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ‘உங்கள் தொகுதியில் முத லமைச்சர்‘ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் நேற்று (ஜூலை 26) வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
கோவை மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்‘ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களின் உண்மை தன்மைக் கேற்றவாறு தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளையும் சம் பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மேற் கொண்டு வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் பெறப்பட்ட பொது மக்களின் கு¬ றகளும் கோரிக்கைகளும் உட னுக்குடன் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி ‘உங்கள் தொகுதியில் முதல மைச்சர்‘ திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் 4 பய னாளிகளுக்கு தலா ரூ.5,014 மதிப்பிலான சலவை பெட்டிகள் ரூ.20,056 மதிப்பிலும் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.98,000 மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட் டா ரூ.6,86,000 என மொத்தம் ரூ.7.06 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் நேற்று வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘உங்கள் தொகுதியில் முத லமைச்சர்”திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.

இத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய மனு தாரர்களுக்கு விரைந்து நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் மீதமுள்ள மனுதாரர்களுக்கு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மனுக்களின் மீது விரைந்து தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img