கோவை உக்கடம் புல்லுக்காடு கலைக்கூடத்தில் நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சிகளை அமைச்சர் செந் தில்பாலாஜி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 2020ம் ஆண்டு ஸ்ட்ரீட் ஆர்ட் ஆஃப் இ&இந்தியா பவுண்டேஷன் உக்கடம் கலைக் கூடத்தைத் தொடங்கியது. இந்த திறந்த வெளி கலைக்கூடம் தேசிய மற்றும் சர்வதேசசுவைஞர்களின் 5 சுவரோவியங்களுடன் தொடங்கியது.
இதனை மேலும் மேம்படுத்தும் வகையில் 5 கூடுதல் சுவரோ விய ங்கள் வரைய ஒப்பந்தம் செய் யப்பட்டு தற்போது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே கலைக்கூடத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதனை இன்று காலை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் உடனிருந்தனர்.



