அதானி ஃபவுண்டேஷன், கடந்த ஓர் ஆண்டு காலஅளவில் காட்டுப்பள்ளி துறைமுகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் சமூகத்தினருக்கு அதுவும் குறிப்பாக, பெண்களுக்கு உதவுவதற்காக ஆர்கானிக் / இயற்கை முறை வேளாண்மை மீது சிறப்பு கவனம் செலுத்தி வந்திருக்கிறது.
பெண்களின் திறமைகளை அதிகரிப்பதும், அவர்களது சமூகத்தில் தலைமைத்துவ பொறுப்புகளை ஏற்க வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குவதும், பாதுகாப்பான ஆர்கானிக் செயல்உத்திகளை அவர்களுக்கு அறிமுகம் செய்வதும் மற்றும் இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியையும், பெண்கள் திறனதிகாரம் பெறுவதையும் உறுதி செய்வதே அதானி ஃபவுண்டேஷனின் இந்த முனைப்புத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது மீது விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புவது இதன் முதன்மைக் குறிக்கோளாகும்.
திருவள்ளூர் மாவட்டத்தின், காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு அருகே உள்ள, ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம். கல்பனா (வயது 38), அதானி ஃபவுண்டேஷனின் இந்த சீரிய முயற்சிகளின் மூலம் ஏற்பட்டிருக்கும் நேர்மறையான மாற்றத்திற்கும் மற்றும் பெரிய அளவிலான வெற்றிக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இவரது சாதனை எண்ணற்ற பெண்களுக்கு ஒரு மாபெரும் வெற்றி வரலாறாக இருக்கிறது. இயற்கை முறை விவசாயத்தை மேற்கொள்ள ஏறக்குறைய 300 விவசாயிகளை ஊக்குவித்து, ஒன்றுதிரட்டி, சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
நிலைப்புத்தன்மையுள்ள வேளாண் நடைமுறைகள் மீது திறன் உருவாக்க செயல்திட்டங்களிலும் மற்றும் பயிற்சி முகாம்களிலும் கல்பனா ஆர்வமுடன் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் விவசாயிகளது உரிமைகள் மற்றும் அவர்களுக்கு உரிய சலுகைத் திட்டங்கள் பற்றி விரிவாக அறிந்திருக்கும் இவர், விவசாயத்தில் ஈடுபடும் பெண்களின் நலனுக்காக தொடர்ந்து குரலெழுப்பி செயலாற்றுபவராக இருக்கிறார்.
கல்பனா கூறியதாவது:
கணவர் டிரக் ஓட்டுனர். எங்களது இரு குழந்தைகளும் நல்ல கல்வி பெற இந்த வருவாய் போதுமானதல்ல என்று சில ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்தேன்.
உடல் சார்ந்த உழைப்பு அவசியப்படும் பல்வேறு பணிகளை செய்திருக்கிறேன். ஆனால், மிகக் குறைவான ஊதியமே அவற்றில் கிடைத்தது. அப்போதுதான் விவசாயப்பணி பற்றி சிந்திக்கத் தொடங்கினேன். உள்ளூர் பஞ்சாயத்தின் மூலம் என்னிடமிருந்த அரை ஏக்கர் நிலம் ஒரு ஏக்கராக மாறியது. ஒரு விவசாயியாக எனது பயணமும் ஆரம்பமானது.
இயற்கை விவசாய முறைகளை நான் பின்பற்றத் தொடங்கினேன். என்னைச் சுற்றியுள்ள சக கிராமத்து மக்களும் ஆர்கானிக் / இயற்கை சாகுபடி விவசாயத்தை மேற்கொள்ளுமாறு அவர்களை ஊக்குவிப்பதே எனது பெருவிருப்பமாக இருக்கிறது.
அதானி ஃபவுண்டேஷனின் உதவியோடு நடத்தப்படும் அவர்களது பயிற்சி அமர்வுகளில் பங்கேற்றதன் மூலம் இயற்கை விவசாய சாகுபடி செயல்முறைகளை புரிந்துகொள்ள முடிந்தது. எனது முதல் சாகுபடி சீசனின்போது, ஆர்கானிக் நெல்லை பயிரிட்டதன் மூலம் ரூ.23,000 என்ற தொகையை என்னால் ஈட்ட முடிந்தது. ஆர்கானிக் பொருட்களுக்கான சந்தை விலை அதிகமாக இருப்பது இதற்கு ஒரு காரணம். நான் பெற்ற பயிற்சியின் மூலம் செயற்கை உரங்களுக்குப் பதிலாக, இயற்கை உரங்களை பயன்படுத்தியதாலும் செலவைக் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தியது.
லாபமும், ஆதாயமும் தரும் எனது இப்பயணமானது, எனது கிராமத்தைச் சேர்ந்த பிற பெண்களும், இயற்கை விவசாய சாகுபடியை மேற்கொள்வதற்கு உத்வேகமளித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
தற்போது, இந்தியாவில் 25,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில் சாகுபடியை மேற்கொள்ளும் 17,000 – க்கும் கூடுதலான விவசாயிகளோடு இணைந்து, இயற்கை / ஆர்கானிக் விவசாய நடைமுறைகளைப் பரவலாக்கும் பணியில் அதானி ஃபவுண்டேஷன் செயலாற்றி வருகிறது.